அதிவேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் - ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு
பதிவு : டிசம்பர் 22, 2020, 07:25 PM
புதிய கொரோனா வைரசால் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தளர்ந்து வந்த பிரிட்டன் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது புதிய கொரோனா வைரஸ் பரவல். வழக்கத்துக்கு மாறாக புதிய வைரஸ் 70 சதவீத வேகம் கொண்டு பரவுவதால், தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் இங்கிலாந்தில் தொற்று படிப்படியாக குறைந்து சராசரியாக 2 ஆயிரத்துக்கும் கீழ் காணப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அதே தொற்று கடந்த நவம்பர் மாத இறுதியில் சராசரியாக 20 ஆயிரத்தை நெருங்கியது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவ தொடங்கி, தற்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்தையும் தாண்டுகிறது. இதில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இங்கிலாந்தில் உயிரிழப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. புதிய கொரோனா பரவலுக்கு முன் இங்கிலாந்தில் சராசரியாக 600 வரை சென்ற இறப்பு விகிதம், மாறுபட்ட பரவலுக்கு பின்னும் கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள திடீர் பரவலால் அந்நாட்டின் உடனான வர்த்தக மற்றும் பொது போக்குவரத்துக்கு ஐரோப்பிய நாடுகள் முதல் பல்வேறு நாடுகள் தடை விதித்து உள்ளது. உலக நாடுகள் தடையால் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் மற்றும் மாணவர்கள், பிரிட்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பிரிட்டனில் 4-வது கட்ட ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டு உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் தளர்வுகளில் இருந்து அரசு பின்வாங்கி உள்ளது. மாறுபட்ட வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு இயக்குநர் மைக்கேல் ரேயான், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவல் தென்படுகிற போதிலும் தொற்று கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதேநேரம் உலக சுகதாார அமைப்பின் தொற்று நோய் பிரிவின் மருத்துவர் மரியா வானோ, உருமாறிய தொற்று பரவும் வேகம் 1 புள்ளி 1 சதவீதத்தில் இருந்து 1 புள்ளி 5 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை கொண்டு பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற போதிலும் தடுப்பூசி முழு வீச்சில் செயல்படுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

194 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

13 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

13 views

ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன.

16 views

நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் - கைவிரித்து, ஒதுங்கிக் கொண்ட இந்திய அரசு

நேபாள நாடாளுமன்ற கீழ் அவையை கலைக்க பரிந்துரைத்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

28 views

சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பம் - டெஸ்லா நிறுவனர் மஸ்க் அறிவிப்பு

புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்...நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...

79 views

நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.