பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது - தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா
பதிவு : டிசம்பர் 22, 2020, 03:35 PM
சென்னையில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசுத் துறை உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினர்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா தேர்தல் தொடர்பான பல்வேறு விவரங்களை தெரிவித்தார்.
கொரோனா தொற்று ஏற்படாதவாறு மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அவர்,கொரோனா காலம் என்பதால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.இடம்பெயர்ந்த மக்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் வாக்காளர்கள் எளிதில் அணுகும் வகையில், வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும்,
80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் உமேஷ் சின்கா கூறினார்.தபால் வாக்குகளில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை எனவும்,வாக்காளர் பட்டியலில் பெயர்களை இணைக்க தேர்தல் வரை அவகாசம் உள்ளது என தெரிவித்த அவர்,பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும் எனவும் உமேஷ் சின்கா தெரிவித்தார்
பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியதோடு,பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு 
மக்களிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார்.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் 
ஆணையரிடம் தெரிவிக்கப்படும் எனவும் உமேஷ் சின்கா கூறினார்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு குறித்து மார்ச் மாதம் முடிவுசெய்யப்படும் என்றும்,கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

231 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

194 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

333 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.