போதை பொருட்கள் புடை சூழ நடந்த உற்சாக விருந்து - சமூக ஊடகங்கள் வழியாக ஆட்களை திரட்டிய கும்பல்
பதிவு : டிசம்பர் 22, 2020, 08:39 AM
கேரளாவில் போதை பொருட்கள் புடை சூழ நடந்த உற்சாக விருந்தில் பங்கேற்ற 60 பேரை போலீசார் சுற்றி வளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...
கொரோனா அச்சம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் புத்தாண்டு கொண்டாட்டங்களும் மற்றொரு பக்கம் களைகட்டி வருகிறது. பார்ட்டிகளுக்கு தயார் என ஓட்டல்கள் அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் கேரளாவில் ஒரு படி மேலே போய் போதை விருந்தால் அமர்க்களப்படுத்தி இப்போது சிக்கலில் சிக்கியிருக்கிறது ஒரு கும்பல்.இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதியில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் மது, போதை பொருட்கள் என உற்சாக விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதுவும் இந்த விடுதி ஏலப்பாறை பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான சிபிஐ கட்சியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கு சொந்தமானது என்பதால் இது அரசியல் ரீதியாகவும் அழுத்தத்தை தந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உல்லாச விடுதிக்கு அதிரடியாக போலீசார் சென்ற போது விதவிதமான போதைப்  பொருட்கள் விநியோகத்துடன் விருந்து நடந்தது உறுதியானது. அதிலும் இந்த விருந்தை எர்ணாகுளத்தை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் ஒருங்கிணைத்ததும் தெரியவந்தது. இந்த விருந்துக்கு அவர்கள் மக்களை வரவைக்க பயன்படுத்தியது சமூக ஊடகங்களை தான். குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் எல்லாமே அன்லிமிடெட் என்ற அறிவிப்பை பார்த்து இளைஞர் பட்டாளமும் வாகமன் நோக்கி படையெடுத்தது. இந்த அறிவிப்பை பார்த்த பலரும் உல்லாச விடுதியில் குவியவே, ஒரு கட்டத்தில் அதுவே அவர்களுக்கு சிக்கலாகி இருக்கிறது. எளிதில் கிடைக்காத உயர் ரக போதைப் பொருட்கள் இந்த விருந்தில் பயன்படுத்தப்பட்டது போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தனை காஸ்ட்லியான போதை பொருட்கள் கிடைத்தது எப்படி? என விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி கொடுப்பதாக கூறி உல்லாச விடுதியை முன்பதிவு செய்த ஒரு பெண் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம் பார்ட்டியில் கலந்து கொண்ட 26 பெண்கள் உள்ளிட்ட 60 பேர் போலீசாரின் கட்டுப்பாட்டில் சிக்கி உள்ளனர். இந்த பிரச்சினையை தொடர்ந்து உல்லாச விடுதியின் உரிமையாளரான சிபிஐ கட்சியை சேர்ந்த ஷாஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிற செய்திகள்

ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

24 views

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - ரூ.2,691 கோடி நிதியுதவி இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

32 views

570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

17 views

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

17 views

ஜன.27, 28-ல் பி.சி.ஆர். பரிசோதனை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

15 views

அகற்றப்படும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை

சென்ட்ரல் வெஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது,. இதனால் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.