காதலியை சரமாரியாக வெட்டிச் சாய்த்த காதலன் - பட்டப்பகலில் சாலையின் நடுவே நடந்ததால் அதிர்ச்சி
பதிவு : டிசம்பர் 22, 2020, 08:32 AM
2 வருட காதலை கைவிட்ட ஆத்திரத்தில் காதலன் சாலையின் நடுவே தன் காதலியை அரிவாளால் வெட்டிச் சாய்த்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில்... 22 வயதான இவர், ஹூப்ளி நகரை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இஸ்மாயிலின் நடவடிக்கைகள் ஆஷாவுக்கு பிடிக்காமல் போகவே அவர் விலக ஆரம்பித்துள்ளார். காதலியின்  செயலில் மாற்றம் தெரியவே, விலகலுக்கான காரணம் தெரியாமல் குழம்பித் தவித்துள்ளார் இஸ்மாயில்.பலமுறை காதலியை சமாதானப்படுத்தியும் காதலை தொடர விரும்பாத ஆஷா, தன் முயற்சியில் உறுதியகாவே இருந்துள்ளார். எப்படியும் நேரில் சந்தித்து பேசினால் காதலி மனம் மாறி விடுவாள் என நம்பிய இஸ்மாயில் உள்ளுக்குள் வேறு ஒரு திட்டத்துடன் ஹூப்ளிக்கு சென்றுள்ளார். 
காதலியை நேரில் சந்தித்த இஸ்மாயில், தன்னுடனான காதலை தொடருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வரவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தலைக்கேறிய இஸ்மாயில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆஷாவை சரமாரியாக வெட்டினார்... 
இதில் ஆஷாவின் கழுத்து, முகம், கை, கால்கள் என சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. நடந்த இந்த சம்பவம் சாலையின் நடுவே என்பதால் பரபரப்பும் அதிகமானது.இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிச் சாய்க்கும் காட்சிகளை பார்த்த பயத்தில் யாரும் நெருங்கவில்லை. இதனிடையே ஒருவர் மட்டும் துணிச்சலாக வந்து இஸ்மாயிலை பிடித்து இழுத்து வந்தார். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். இதனிடையே சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஷா மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சிகளை எல்லாம் ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில் அது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்மாயில் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காதலியை காதலன் கொடூரமாக வெட்டிச் சாய்த்த இந்த சம்பவம் பார்ப்போரை பதற வைக்கும் வகையில் உள்ளது... 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

20 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

73 views

நாட்டின் 72 -வது குடியரசு தினம் கோலாகலம்

நாட்டின் 72 வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

109 views

ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - அறிந்துக்கொள்வோம் வரலாற்று தகவல்.

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது? அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது?. வரலாற்று தகவல்களை அறிந்துக்கொள்வோம்.

63 views

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

27 views

சீன ராணுவத்தினர் எல்லை தாண்ட முயற்சி - சீன நடவடிக்கையை முறியடித்த இந்திய வீரர்கள்

சிக்கிமில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினர் நடவடிக்கையை, இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.