அண்ணாத்த படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் - நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கும் அண்ணாத்த
பதிவு : டிசம்பர் 22, 2020, 08:24 AM
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு.தர்பார் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டிய நடிகர் ரஜினிகாந்த், வேட்டி சட்டை என அசத்தலான கெட்-அப்பில் அண்ணாத்த படம் மூலம் கலக்க இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது. ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும்  அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள். 
கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. 
இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் ஐதராபாத் கிளம்பினர். அதே விமானத்தில் கேக் வெட்டி, தனது பிறந்த நாளையும் ரஜினிகாந்த் கொண்டாடினார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் எப்போதும் உடனிருக்கும் மகள் ஐஸ்வர்யா, அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பதாக சொல்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், ரஜினியை யாரும் நெருங்காத வண்ணம் அவர் கவனித்துக் கொள்கிறாராம். மகளுடன் ரஜினி - சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட படத்தை பயன்படுத்தலாம்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் ராமோஜி பிலிம் சிட்டியில்தான், நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்த் சென்று விட்ட நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. விமானம் மூலமாக ஐதராபாத் சென்றால் வெளியே தெரிந்து விடும் என்பதால், அவர்கள் சாலை மார்க்கமாகவே ஐதராபாத் செல்வதாகவும் தகவல் கசிந்துள்ளது. படப்பிடிப்பின் இடைவேளை நேரங்களில், கட்சியின் நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகளான தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனமூர்த்தியிடம் ஆலோசனையிலும் ஈடுபடுகிறாராம். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு முடியும் நிலையில், ரஜினியின் அரசியல் கட்சி குறித்தே, அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

171 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திருப்பம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

833 views

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

68 views

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

262 views

நாற்காலி' திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை எடுத்துரைக்கும் விதமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

37 views

'மாஸ்டர்' மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

521 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.