பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது - ஸ்டுடியோ உரிமையாளர்கள் தரப்பு
பதிவு : டிசம்பர் 21, 2020, 07:41 PM
பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என ஸ்டுடியோ உரிமையாளர்கள் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் சுமார் 40 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு  இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், இட உரிமை தொடர்பாக இருதரப்புக்கும் இடையே விரிசல் விழவே, Card - 3 பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம்  தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவை ஒரு நாள் அனுமதிப்பதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளவும் சில மணி நேரங்கள் தியானம் செய்து கொள்ளவும் இளையராஜாவுக்கு  அனுமதி வழங்குவது தொடர்பாக பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு  உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது , அவரது பிரதிநிதிகளை வேண்டுமானால் அனுதிக்கிறோம் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, இளையராஜா, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஸ்டுடியோவுக்குள் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக  Card - 8 விளக்கமளிக்க  பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

ஆஸ்கர் நோக்கி... சூர‌ரைப்போற்று

ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

200 views

ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

20 views

"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயண‌ன்

கர்ண‌ன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன் கூறியுள்ளார்.

19 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

31 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.