ஆன்லைன் ரம்மி தடைக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : டிசம்பர் 21, 2020, 04:30 PM
ஆன்லைன் ரம்மியை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இறுதி விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து  ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்நிலையில், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேம்ஸ்கிராப்ட் தரப்பில் வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானது தான் என்றும், ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது என்றும் வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், குதிரை பந்தயமும், ரம்மியும் ஒன்றாக கருத முடியாது எனவும், பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பிள்ளைகள் ஆன்லைன் ரம்மி விளையாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டன. அவசர சட்டத்துக்கு பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்பதால் அதன்பின்னர் பதிலளித்து, இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாகவும்  நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.  குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது என தெரிவித்த நீதிபதிகள்,  அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, இறுதி விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

தமிழகம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உள்ளது. இவர்களில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆக உள்ளனர்.

1 views

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

6 views

உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள் -பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

39 views

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

19 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.