சிலி நாட்டில் அதிபருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் - முக கவசம் அணியாததால் அதிரடி நடவடிக்கை
பதிவு : டிசம்பர் 21, 2020, 01:53 PM
சிலி நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத அதிபருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலி, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும் . அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த விதிமுறையை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில், அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் கடற்கரைக்கு சென்றபோது, ஒரு பெண்ணுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர், தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

144 views

ஹெச்-4 விசா மூலம் பணியாற்ற அனுமதி - அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

அமெரிக்காவுக்கு ஹெச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உள்ளார்.

178 views

இங்கிலாந்தில் 'பேஸ்புக் நியூஸ்' தொடக்கம்

பேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தில் முதன்முறையாக பேஸ்புக் நியூஸ் என்ற பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

49 views

1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

87 views

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

38 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.