இங்கிலாந்தில் வடிவத்தை மாற்றும் கொரோனா - இந்தியாவில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு
பதிவு : டிசம்பர் 21, 2020, 11:28 AM
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தன்னுடைய வடிவங்களை மாற்றுவதாக எச்சரிக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தன்னுடைய வடிவங்களை மாற்றுவதால் அதனை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக எச்சரித்திருக்கும் அரசு, கிறிஸ்துமஸ் ஊரடங்கு தளர்வை மாற்றியிருக்கிறது. இந்நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன. இதற்கிடையே வைரஸ் வடிவங்களை மாற்றுவது தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று ஒரு அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது. சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு நடத்தும் இந்த கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியும், கூட்டு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரோடெரிக்கோ எச் ஓப்ரினும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பது என்று எந்தஒரு கொள்கை முடிவும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை என்றும் இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

144 views

ஹெச்-4 விசா மூலம் பணியாற்ற அனுமதி - அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

அமெரிக்காவுக்கு ஹெச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உள்ளார்.

176 views

இங்கிலாந்தில் 'பேஸ்புக் நியூஸ்' தொடக்கம்

பேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தில் முதன்முறையாக பேஸ்புக் நியூஸ் என்ற பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

49 views

1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

86 views

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

38 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.