"கடன் தொல்லை : தொழிலதிபர்களும் விதி விலக்கல்ல" - நகைக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
பதிவு : டிசம்பர் 21, 2020, 09:38 AM
கொரோனா ஊரடங்கு ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சமின்றி பலரது வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று...
பணக்கார‌ர்கள் பல்லாயிரம் கோடி கடன் வாங்கினால் கூட வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்து ராஜ வாழ்க்கையை தொடர்வதை பார்க்க முடிகிறது... இது போன்ற சம்பவங்களால், கடன் தொல்லை, தற்கொலை என்றாலே ஏழை எளியவர்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள்.ஆனால், கொரோனாவுக்கு பின் வெளிநாடு செல்ல ஏகப்பட்ட நிபந்தனைகள்.அதனால் பணக்கார‌ர்களும் கடனை தொல்லையாக கருத வேண்டிய சூழல்..அப்படி ஒரு சம்பவம் தான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நகைக்கடை அதிபருக்கு நேர்ந்துள்ளது. 
மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. அவர்களை மீட்ட போலீசார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த‌னர். இதை தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் எஸ்.வி.ஆர் தங்க நகை மாளிகை , பைனான்ஸ் நிறுவனம், தானிய மண்டி என பெரும் தொழிலதிபராக வலம் வந்தவர் பலராமன்.நகை கடையின் பொறுப்பை ஏற்ற இவரது மகன் ஹரி, நடிகை ஓவியாவை வைத்து கடந்த ஆண்டு தான் நகைக்கடைக்கு, பிரம்மாண்ட ஓபனிங் கொடுத்தார்.... கொரோனா ஊரடங்கால் நகை விலை ஏற்ற இறக்கமாக இருந்த காரணத்தால் நகைக்கடைக்கு கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட பலரிடம் கடன் பெற்றுள்ளார் ஹரி... 
ஊரடங்கு நீண்டு கொண்டே செல்ல, வாடிக்கையாளர்கள் வரத்து இன்றி, நகைக்கடை மேலும் மேலும் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிகிறது. இதனால் கொடுத்த கடனை திரும்ப கேட்டு வந்தவர்கள், ஒருகட்டத்தில் கடைக்கு முன் போராட்டத்தில் குதித்தனர்.இந்த போராட்டத்தால் கொஞ்ச நஞ்ச வியாபாரமும் மொத்தமாக முடங்கியதாக கூறப்படுகிறது. ... வேறுவழியின்றி கடையை மூடிவிட்டு கடந்த ஒருவாரமாக தலைமறைவானது பலராமனின் குடும்பம்...  

இதையடுத்து கடன் கொடுத்த 50க்கும் மேற்பட்டோர் தாராபுரம் காவல்நிலையத்தில் ஹரி மீது புகார் அளிக்க, மொத்த குடும்பமும் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளது. இதன் காரணமாக, தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி, தங்கள் தற்கொலை செய்ய நினைத்துள்ளது பலராமன் குடும்பம்.அதன் படி 75 வயது பலராமன், அவரது மனைவி புஷ்பா,  மகன் ஹரி, ஹரியின் மனைவி திவ்யா, மற்றும் ஹரியின் 8 வயது குழந்தை ராதா ஆகியோர்  நகைக்கடையில் பயன்படுத்தப்படும் சைனைடை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.தகவல் அறிந்து அவர்களை போலீசார் மீட்ட நிலையில், பலராமன், அவரது மனைவி திவ்யா, 8 வயது குழந்தை ராதா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

170 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

அதிமுக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

மதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்

7 views

புள்ளி விவரங்களை சரியாக எழுதி வையுங்கள் - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

28 views

ஆன்லைன் சூதாட்டம் - அவசர தடை ஏன்?

தற்கொலைகளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியே சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.

8 views

4 மாத மின்நுகர்வு மொத்தமாக கணக்கீடு - தமிழக அரசுக்கு எதிராக மேல்முறையீடு

தமிழகத்தில் 4 மாத மின்சார பயன்பாட்டுக்கு மொத்தமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

21 views

"துறைமுக கட்டுமானம் சரியில்லை" : திமுக ஆட்சியில் சீரமைக்கப்படும்- கனிமொழி

மீனவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தேங்காய்பட்டணம் துறைமுகம் சீரமைக்கப்படும் என திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

29 views

பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சேலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர்கள் செல்போன் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.