இந்திய டெஸ்ட் வரலாற்றில் மோசமான தோல்வி - ஒரு மணி நேரத்தில் முடிந்த இந்தியாவின் ஆட்டம்
பதிவு : டிசம்பர் 20, 2020, 06:34 PM
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இந்திய அணி
இந்திய அணி வரலாற்றின் மோசமான தோல்வி குறித்து பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு : -   தூங்கி எழுந்து பார்த்தேன்... அணியின் ஸ்கோர் 369 ஆக இருந்த‌து... என்னடா இது டெஸ்ட் மேட்ச்சா டிடுவெண்டியா... இப்படி அடிக்கிறார்கள் என நினைத்துக்கொண்டே முகத்தை கழுவி விட்டு பார்த்தேன்... அது 369 அல்ல, 36 ரன்களுக்கு 9 விக்கெட் என்பது தெரிய வந்த‌து... அதை விட பேரதிர்ச்சியாக இருந்த‌து. மறுபடியும் உறங்கிவிட்டேனோ என எண்ணி தொடர்ந்து முகத்தை கழுவி கொண்டே இருந்தேன்.. பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சோயாப் அக்தர் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி குறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவு இது... அப்படி என்ன நடந்த‌து டெஸ்ட் போட்டியில்... முதல்முறையாக ஆஸ்திரேலியா அணியுடன் பிங்க் பாலில் பகல் இரவு ஆட்டத்தை எதிர்கொண்டது இந்திய அணி...  முதல் இன்னிங்சில் எடுத்த‌து என்னவோ, 244 ரன்கள் தான்... ஆனால் தங்கள் வழக்கமான போராட்ட குணத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 191 ரன்களில் சுருட்டியது... அதாவது 53 ரன்கள் முன்னிலையில் இருந்த‌து இந்தியா... 
இதனால் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா, பும்ராவை ஒன்டவுன் பேட்ஸ்மேனாக களமிறக்கி விடும் அளவிற்கு படு ஜாலியாக இருந்த‌து.... ஆஸ்திரேலியாவும் 2 ஆம் நாள் முடியும் வரை பும்ரா விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத நிலையிலே இருந்த‌னர்.இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி என்ன வியூகம் வகுத்தார்களோ தெரியவில்லை, 3 ஆம் நாளில் இந்தியாவின் ஆட்டம் 1 மணி நேரத்திலே முடிந்து போனது...  கமின்ஸ் மற்றும் ஹேசல்வுட்டின் வேகத்தில் வெறும் 36 ரன்னில் சுருண்டது இந்தியா... புஜாரா, ரஹானே, அஸ்வின் என 3 டக் அவுட்கள்.. இந்திய அணியின் ஒரு வீர‌ர் கூட இரட்டை இலக்க ஸ்கோரே தொடவில்லை... மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த‌தே அதிக பட்ச ஸ்கோர்..  இதை தொடர்ந்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டரை நாளில் போட்டியை முடித்த‌து. இதற்கு முன்1974  ஆம் ஆண்டில், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 42 ரன்களில் சுருண்டதே மோசமான சாதனையாக இருந்த‌து. 
இந்த தோல்வி மூலம் இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் தன் மோசமான ஆட்டத்தை பதிவு செய்துள்ளது. உலக அரங்கில் இந்த ஸ்கோர் 2 வது மோசமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 26 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த மோசமான தோல்வியால் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தார். 2 நாட்களாக விளையாடிய சிறப்பான ஆட்டம், 1 மணி நேரத்தில் நொறுங்கி விட்டது என அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாம்பவான் ச‌ச்சின், 2 வது இன்னிங்சில் இந்தியா படுமோசமாக விளையாடியதாக சுட்டிக்காட்டினார். டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சை வைத்து வெற்றியை தீர்மானித்துவிட கூடாது என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக கூறியுள்ள ச‌ச்சின், ஆஸ்திரேலிய அணிக்கு தன் வாழ்த்தையும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

நாட்டுப்புறப்பாடல்களில் கலக்கும் இளைஞர் - பழமையில் புதுமையைப் புகுத்தி அசத்தல்

காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நாட்டுப்புற இசையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

4 views

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.

4 views

ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

26 views

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - ரூ.2,691 கோடி நிதியுதவி இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

36 views

570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

19 views

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.