திமுகவை சுயநலக்கட்சி என விமர்சித்த முதல்வர் - திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி கண்டனம்
பதிவு : டிசம்பர் 19, 2020, 04:00 PM
திமுகவை சுயநலக் கட்சி என பேசியதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணிக்கும், பொது நலத்திற்கும் முதல்வர் பழனிசாமிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விமர்சித்துள்ளார். தன் குடும்பம் வாழவேண்டும் என ஸ்டாலின் நினைப்பதாக பேசிய முதல்வர் பழனிசாமி, தன் குடும்பத்தின் மூலமாகவே கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதாக குற்றம்
சாட்டியுள்ளார். கொரோனா சமயத்தில் முதலில் களப்பணி ஆற்றியதும், அதற்காக கட்சியின் எம்எல்ஏ அன்பழகனை  பலியாக கொடுத்ததும் திமுகதான் என்று தெரிவித்துள்ள பொன்முடி, அப்போதும் ஸ்டாலினை முதல்வர் பழனிசாமி விமர்சித்ததாக தெரிவித்துள்ளார்.  கொரோனா கட்டுப்பாடு வைத்துக்கொண்டு, முதல்வர் கட்சிப் பிரச்சாரம் செய்ததாகவும், அரசு விழாக்களில் எதிர்கட்சிகளை வசை பாடியதாகவும் கூறியுள்ளார். முதல்வரின் ஆய்வுகள் அன்றி, தமிழகத்தில் இயற்கையாகவே கொரோனா தொற்று குறைந்ததாக கூறியுள்ள பொன்முடி, முதல்வரின் ஆய்வு பக்காவான அரசியல் என்று விமர்சித்துள்ளார். சுயநலத்தின் மொத்த உருவமாக  முதல்வர் பழனிசாமி இருப்பதாக கூறியுள்ள பொன்முடி, திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

231 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

194 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கியது - கர்நாடகா அரசு மருத்துவமனை

சசிகலா நாளை விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் நீங்கி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருவதாக விக்டோரியா மருத்துமனை தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்போம்........

41 views

கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

76 views

சசிகலா 27 - ம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல்

சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.

102 views

100 நாள் செயல் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

50 views

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவு இடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

15 views

திமுகவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.