நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து செல்போன் பறிப்பு - சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய வழிப்பறி திருடர்கள்
பதிவு : டிசம்பர் 17, 2020, 07:05 PM
சென்னையில் இளம் நடிகரை வழிமறித்து, செல்போன் பறித்து சென்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடல் படம் மூலம் அறிமுகமாகி, வை ராஜா வை, ரங்கூன், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தவர் நடிகர் கவுதம் கார்த்திக்.நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான இவர், சென்னை போயஸ் தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
தினமும் அதிகாலையில் சைக்கிளிங் செல்வது நடிகர் கவுதம் கார்த்திக்கின் வழக்கம்.கடந்த 2ஆம் தேதி சைக்கிளிங் சென்ற கவுதம் கார்த்திக்குக்கு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது...மெரினா வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு தனது வீட்டிற்கு கவுதம் திரும்பி கொண்டிருந்தார்.அப்போது ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் வந்த அவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து மிரட்டியுள்ளனர்.
அவரிடம் இருந்த செல்போனையும் மர்ம கும்பல் பறிக்க முயன்றுள்ளது.
ஆனால் கவுதம் தொடர்ந்து முரண்டு பிடிக்கவே அவரை கீழே தள்ளிவிட்டு கையில் பேண்ட் மூலம் சுற்றி வைக்கப்பட்டிருந்த செல்போனை பறித்துக்கொண்ட அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளது.
நடிகர் கவுதம் கார்த்திக்குக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் வெளியாகி திரையுலகிலும், மக்கள் மத்தியிலும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய மயிலாப்பூர் போலீசார், பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவரும், மயிலாப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனும் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டத்தை கண்டுபிடித்தனர்.2 பேரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், 
திருட்டு செல்போன் எங்கே? என விசாரணை மேற்கொண்டனர்.  ராயப்பேட்டையை சேர்ந்த ஃபரூஸ்கான் தான், திருட்டு செல்போனை வாங்கியவர் என்பதை உறுதி செய்து அவரையும் கைது செய்தனர்..

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

142 views

பிற செய்திகள்

பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

41 views

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

507 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

40 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

81 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.