2 ஆண்டுகளுக்கு முன் மாயமான இளம்பெண் - காவல்நிலையமே கண்ணீர் சிந்திய தருணம்
பதிவு : டிசம்பர் 17, 2020, 06:00 PM
மதுரையில் காணாமல் போன பெண், ஜார்கண்ட் மாநிலத்தில் கல்லூரி மாணவியாக மாறியுள்ளார்.
மாணவியை பெற்றோரிடம் வீடியோ காலில் பேச வைத்த தருணம், காவல் நிலையத்தையே கண்ணீரில் மிதக்க வைத்த‌து... உணர்ச்சிகரமான அந்த தருணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு 2019 ஆம் ஆண்டு... வீட்டை விட்டு வெளியேறி சென்ற அந்த பெண்ணின் பெயர் திவ்யா.. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த திவ்யாவுக்கு 2017ம் ஆண்டில் அவரது உறவுக்காரருடன் திருமணம் முடிந்த நிலையில், மண வாழ்க்கை கசப்பாக போனதால்,  தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழுமாறு பெற்றோர் நிர்பந்தம் செய்ததால், மனம் நொந்து போன திவ்யா, 2019 ஆம் ஆண்டு மே மாதம் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.அவரைப்பற்றிய தகவல் எதுவும் தெரியாததால், ஒருகட்டத்தில் திவ்யாவின் பெற்றோர் கொடுத்த புகார் கிடப்பில் போட்டது. இந்த நிலையில் தான் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேம‌மாலா தலைமையிலான சிறப்பு பிரிவினருக்கு மதுரையில் நீண்ட நாட்களாக காணாமல் போனவர்களை கண்டறியும் பணி கொடுக்கப்பட்டது.  ஹேம‌மாலாஆய்வாளர் , கண்டுபிடிக்க முடியாது என காவல்துறையால் கைவிடப்பட்ட 52 பேரை கண்டுபிடித்து கொடுத்து உறவுப் பாலமாக இருந்து வருபவர். அவர் வசம் திவ்யா வழக்கு வந்ததும்,  அடிக்கடி திவ்யா தொடர்பு கொண்ட ஒரு எண்ணை விசாரித்துள்ளனர். அது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஒரு கன்னியாஸ்திரி என்பது தெரிய வருகிறது. இதையடுத்து, அந்த கன்னியாஸ்திரியின் உதவியோடு, திவ்யாவை கண்டறிந்த நிலையில், நேரடியாகவே ஆய்வாளர் ஹேமலதா செல்போனுக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் திவ்யா.  அப்போது,  கணவருடன் வாழ பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த இன்ப செய்தியை அறிந்த திவ்யாவின் பெற்றோர், உடனடியாக காவல்நிலையம் வந்தனர். அப்போது, பெற்றோர் முன்னிலையிலேயே திவ்யாவிடம் வீடியோ காலில் பேசினார், இன்ஸ்பெக்டர் ஹேம‌மாலா. மகளின் குரலை 2 ஆண்டுகளுக்கு பின் கேட்ட பெற்றோரும் இனம் புரியாத இன்ப அதிர்ச்சியில் திளைத்தனர்..திவ்யாவும் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே பேசினார். ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹேம‌மாலா, பெற்றோரை நோக்கி செல்போனை திருப்ப, அதுவரை கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த திவ்யாவின் தந்தையும், கதறி கதறி அழத் தொடங்கினார்... தன் மகள் உயிரோடு இருக்கிறாள் என்பதை பார்த்துவிட்டேன்.. எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என அவர்கள் கூறியபோது, காவல் நிலையமே கண்ணீரில் மித‌ந்த‌து. இதைத் தொடர்ந்து, திவ்யாவை பெற்றோருடன் சேர்த்து வைத்து, தனது 53 வது உறவுப் பாலத்தை போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆய்வாளர் ஹேம‌மாலா... தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

234 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

198 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 views

பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

105 views

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

29 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

622 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

42 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.