அரசாணைகளை தமிழில் தயாரித்து வெளியிட கோரிய மனு - மார்ச் 29 ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
பதிவு : டிசம்பர் 17, 2020, 05:10 PM
தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிட கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இதில் தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்படும் நிலையில், தொன்மையான தமிழ்மொழி அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஆகியவை ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், கடிதங்களை தமிழில் அனுப்ப வேண்டுமென காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டு இருந்ததையும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தாம் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால் தமது மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு வருகின்றன மார்ச் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

32 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

41 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

117 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.