ரஜினியின் கட்சி தொடர்பாக கசிந்த தகவல்கள் உண்மையா? - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் பரபரப்பு
பதிவு : டிசம்பர் 16, 2020, 07:13 PM
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும் படி ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும் படி ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற முழக்கங்களுடன், கட்சி தொடங்கும் அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டார், நடிகர் ரஜினிகாந்த். தான் தொடங்கப் போகும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நியமித்த ரஜினி, ஜனவரியில் அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 31-ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, ரஜினி கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கட்சியின் கொடி உள்ளிட்டவை எப்படி இருக்கும் என விவாதங்கள் பரபரத்தன. இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயர், மக்கள் சேவை கட்சி என்றும், அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இதுகுறித்த தகவல் இடம் பெற்றிருந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது. சென்னை எர்ணாவூரை தலைமையிடமாகக் கொண்டு, அகில இந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் இயங்கிவந்த அந்தக் கட்சி, செப்டம்பரில் மக்கள் சேவை கட்சியாக பெயர் மாற்றம் பெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் விதமாக, சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி மக்கள் சேவை கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதில், கட்சியின் முதல் விருப்பமாக பாபா படத்தில் ரஜினி பயன்படுத்திய இருவிரல் முத்திரையும், இரண்டாவது முன்னுரிமையாக ஆட்டோ சின்னத்தையும் ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், பாபா முத்திரையுடன் இருக்கும் சின்னம், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தோடு ஒத்திருப்பதால், ஆட்டோ சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் மெகா ஹிட் அடித்த பாட்ஷா படத்தில், ஆட்டோக்காரன் கெட்டப் இடம் பெற்றிருப்பதால், இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்னொருபுறம், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது குறித்த செய்தியை, வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வெளியிடும் தேர்தல் ஆணையம், தற்போது டிசம்பர் மாதமே வெளியிட்டதோடு, ரஜினி கட்சி என தகவல் வெளியானதால் மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்தநிலையில், தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நிர்வாகிகளை காத்திருக்கும் படி அறிவுறுத்தி இருக்கிறது, ரஜினி மக்கள் மன்றம். அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் ரஜினி, தான் ஏற்கனவே கூறிய படி, டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது, அனைத்து கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் விடை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

32 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

42 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.