நெருங்கும் தை பொங்கல் - ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் கிராமம்
பதிவு : டிசம்பர் 16, 2020, 03:33 PM
தைப் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
தை மாதம் என்றாலே பொங்கல், கரும்பைப் போல கட்டாயம் நினைவுக்கு வருவது, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு....
அதிலும், மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரபலம்.இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலும் பில்லமநாயக்கபட்டி, கொசவபட்டி, புகையிலைபட்டி, தவசிமடை, வெள்ளோடு ஆகிய கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, வரவிருக்கும் தைப் பொங்கலை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளும், அவற்றை அடக்க வீரர்களும் தயாராகி வருகின்றனர்.குறிப்பாக, பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில், வாடிவாசல் அமைத்து காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். வாடிவாசலில் இருந்து மின்னலாக வெளியேறி, வேகமெடுப்பதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.மூச்சுத் திறனுக்காக, இரு தினங்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சியிலும், காலை மாலை வேளைகளில், நடைப்பயிற்சியிலும் காளைகளை ஈடுபடுத்துகிறார்கள்.வெறும் பயிற்சியோடு நிறுத்தாமல், காளைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமைக்காக,  தவிடு, உளுந்து, சிவப்பு துவரை, பட்டாணி போன்ற சிறப்பு உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த கிராமத்தில் மட்டும் 15 காளைகளை தயார்படுத்தி வரும் நிலையில், காளைகளை அடக்கும் வீரர்களும் பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கில் பல்வேறு நிகழ்வுகளுக்கு வழிகாட்டுதலுடன் தமிழக அரசு அனுமதி வழங்குவதைப் போல, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. வரும் பொங்கலில், வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாயும் என்ற நம்பிக்கையுடன் ஆவலாக காத்திருக்கின்றனர், பில்லமநாயக்கன்பட்டி கிராம மக்கள்....

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

171 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

72 views

பிற செய்திகள்

அதிமுக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

மதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்

12 views

புள்ளி விவரங்களை சரியாக எழுதி வையுங்கள் - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

28 views

ஆன்லைன் சூதாட்டம் - அவசர தடை ஏன்?

தற்கொலைகளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியே சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.

8 views

4 மாத மின்நுகர்வு மொத்தமாக கணக்கீடு - தமிழக அரசுக்கு எதிராக மேல்முறையீடு

தமிழகத்தில் 4 மாத மின்சார பயன்பாட்டுக்கு மொத்தமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

21 views

"துறைமுக கட்டுமானம் சரியில்லை" : திமுக ஆட்சியில் சீரமைக்கப்படும்- கனிமொழி

மீனவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தேங்காய்பட்டணம் துறைமுகம் சீரமைக்கப்படும் என திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

30 views

பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சேலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர்கள் செல்போன் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.