அண்ணா பல்கலைக்கழக முறைகேடு விவகாரம் - "யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்" - விசாரணை அலுவலர் கலையரசன் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 17, 2020, 02:15 PM
அண்ணா பல்கலைக் கழக முறைகேடுகள் தொடர்பாக யார் வேண்டுமானாலும் உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என விசாரணை அலுவலர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்த உள்ளார்.  சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை அண்ணா பல்கலைகழக நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும், பணி நியமனம் உள்ளிட்ட அனைத்தும் விசாரிக்கப்படும் எனவும்,
தேவைப்பட்டால் சூரப்பா பதவி ஏற்பதற்கு முன்பு நடந்த நியமனங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த உள்ளதாக கலையரசன் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் வங்கி கணக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும், சூரப்பா தொடர்பான முறைகேடு மற்றும் ஊழல் குறித்து யார் வேண்டுமானாலும் தன்னிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் , உரிய ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அந்த புகார்கள் குறித்து  முழுமையாக விசாரணை நடத்தப்படும் எனவும் கலையரசன் தெரிவித்துள்ளார். காவல், நிதி மற்றும் நிர்வாக அனுபவம் பெற்ற அதிகாரிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நபர்களை அலுவலர்களாக நியமிக்க உயர் கல்வித் துறையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அலுவலர்கள் நியமிக்கப்பட்டவுடன் விசாரணை தொடங்கும் என கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு தேவைப்பட்டால்  சென்று விசாரணை நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

104 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

86 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

8 views

பிற செய்திகள்

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

21 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

25 views

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

57 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

37 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

29 views

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.