புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி - புற்றுநோயால் ஒரே மாத‌த்தில் இந்த நிலை
பதிவு : நவம்பர் 17, 2020, 12:26 PM
கருப்பன் குசும்புக்காரன் என வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் வசனத்தை பேசி பிரபலம் அடைந்த நடிகர் தவசி தான் இப்படி இருக்கிறார்
பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்த அந்த மீசைக்கார‌ர் தவசிதான் இப்படி எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கிறார்.சமீபத்தில் கூட பல சீரியல்களில் நடித்து வந்த தவசி, ஒரே மாத‌த்தில் இந்த நிலைக்கு மாறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுவே உண்மை... கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி கோம்பை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் படபிடிப்பிற்கு நடிகர்கள் சென்ற கார் விபத்தில் சிக்குகிறது. அதில், காரில் பயணித்த ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காரில் இருந்த நடிகர் தவசிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து தவசி உடலை பரிசோதித்த போது அதிர்ச்சி தரும் விதமாக அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. இதனால் உணவு உண்ணமுடியாமல் போகவே, ஒரே மாத‌த்தில் இந்த நிலைக்கு மாறியுள்ளார் தவசி...சினிமாவில் பிரபலமடைந்தாலும், தவசியின் சம்பளம் என்னவோ, நான்காயிரம், 5 ஆயிரம் தான்.. தன் மனைவி இன்றும்  நூறு நாள் வேலைக்கு சென்றுகொண்டு இருக்கிறார் என வேதனையுடன் கூறுகிறார் தவசி..
டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏதும் அறியாத‌தால் யாரிடம் உதவி கோருவது என்பது தெரியாமல் தவசி தவித்து கொண்டிருந்த சமயத்தில், நாடக துறையை சேர்ந்த அவரது உறவினர் ஒருவர், அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவும், மருத்துவருமான சரவண‌ன் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். இலவசமாக புற்றுநோய் கட்டியை நீக்கி கொடுப்பதாக வாக்குறுதி அளித்த எம்எல்ஏ சரவண‌ன், தனே சிகிச்சை அளித்து , கட்டியை வெற்றிகரமாக நீக்கியும் காட்டியுள்ளார்.  கட்டியை நீக்கிவிட்டார்கள்... ஆனால் வீட்டிற்கு சென்று மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ளவோ, சத்தான உணவு உண்ணவோ என்னிடம் பணம் இல்லையே என வேதனை தெரிவிக்கும் தவசி, சக நடிகர்களின் உதவியை நாடி நிற்கிறார்... மீண்டும் பழைய கருப்பனாக மீசையை முறுக்க வேண்டும் என கலை மீது அவர் கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியபோது, அவரது கண்களில் கண்ணீரும் பீறிட்டது... தவசி கோரிய நிதி உதவி அவருக்கு கிடைக்குமா...? மீண்டும் முன்புபோல் சினிமாத்துறையில் மீசையை முறுக்குவாரா தவசி...? பொறுத்திருந்து பார்ப்போம்... 

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

198 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3476 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4757 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.