ரூ.14 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் பந்தய புறா - அதிக தொகைக்கு ஏலம் போய் உலக சாதனை
பதிவு : நவம்பர் 17, 2020, 12:19 PM
பெல்ஜியத்தை சேர்ந்த பந்தய புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.
 நியூ கிம் என்று அழைக்கப்படும் 2 வயதான அந்த பந்தய புறா, 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பந்தயத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புறாவை வாங்க 18 ஆயிரம் ரூபாயுடன் தொடங்கிய ஏலம் 90 நிமிடங்களில் 14 கோடி ரூபாயாக அதிகரித்தது. சீனாவை சேர்ந்த 2 பணக்காரர்கள் அந்த புறாவை 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.   

"டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது"
டிரம்ப் ஈகோவை கைவிட வேண்டும் - பாரக் ஒபாமா
அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தும் டிரம்ப் அதை ஏற்காமல் பேசி வருகிறார். எனவே, டிரம்ப் தனது ஈகோவை விட்டுவிட்டு நாட்டின் நலனை முதலில் வைக்கும் நேரம் வந்துவிட்டது என ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது" 
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரையன் தகவல்
தற்போதைய நிலையில், ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது என்று டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்கு தொழில்நுட்ப ரீதியாக இணைந்து செயல்படுவேன் எனவும்  ராபர்ட் ஓ பிரையன் கூறியுள்ளார்
அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை"
"முன்னணி நிறுவனங்கள் கைகொடுக்க தயார்"
நிறுவன தலைவர்களுடன் ஜோ பைடன் ஆலோசனை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னணி நிறுவனங்களுக்கு கைகொடுக்க தயாராக உள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.  மைக்ரோசாஃப்ட் கார்ப் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, ஜெனரல் மோட்டார்ஸ்  நிறுவனத்தின் மேரி பார்ரா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பைடன்  இதனை தெரிவித்தார்.
கலிபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று -ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களில், கலிபோர்னியாவில், கொரோனா வைரஸ் பரவல் இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவில் அதிவேகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசாம் தெரிவித்து உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

202 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

158 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

120 views

பிற செய்திகள்

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார், ஜசிந்தா - நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்

நியூசிலாந்தில் 53வது நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது.

9 views

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின்உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

16 views

கில்கிட்-பல்திஸ்தான் பேரவை தேர்தலில் முறைகேடு - பாக். மக்கள் கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கில்கிட் பல்திஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 views

தடுப்பு மருந்து செலுத்தும் ஊசிகள் தயாரிக்க கடன் - அதிபர் டிரம்ப் அரசு ரூ.43 ஆயிரம் கோடி வழங்கியது

தடுப்பு மருந்து ஊசிகள் தயாரிக்க, தனியார் மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.

5 views

இலங்கையில் 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் - தமிழகத்தில் இருந்து கடத்தல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

6 views

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய சீனா- பிரத்யேக ரோபோட்டுடன் அனுப்பப்பட்ட விண்கலம்

பிரத்யேக ரோபோட்டுடன் நிலவுக்கு சீனா விண்கலம் அனுப்பி உள்ளது.

168 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.