துப்பாக்கி சூட்டில் முடிந்த 25 வருட நிலப்பிரச்சினை - 85 வயதிலும் வன்முறையில் இறங்கிய முதியவர்
பதிவு : நவம்பர் 17, 2020, 11:33 AM
மாற்றம் : நவம்பர் 17, 2020, 11:36 AM
பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள், தியேட்டர்களுக்கு உரிமையாளர் என்ற அடையாளத்தோடு இருப்பவர் நடராஜன்.
85 வயதான இவர், அந்த பகுதியில் பிரபலமான தொழிலதிபராக உள்ளார். இவரின் வீட்டருகே அக்கரைப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் என்ற 60 வயதான விவசாயிக்கு சொந்தமான 12 செண்ட் நிலம் உள்ளது. இந்த 12 செண்ட் நிலம் தொடர்பாக நடராஜன் மற்றும் இளங்கோவன் இடையே கிட்டத்தட்ட 25 வருடங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த இளங்கோவன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2014ல் இளங்கோவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆனாலும் கூட, இள​ங்கோவனின் நிலத்தின் மீது கண் வைத்த நடராஜன், அதை விடுவதாக இல்லை. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடராஜன் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் தான் தன் நிலத்திற்கு தன்னுடைய மாமனார் பழனிசாமி, சம்பந்தி சுப்ரமணியுடன் சென்றுள்ளார் இளங்கோவன். 
அப்போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆத்திரமடைந்தார் நடராஜன். பேசிக் கொண்டிருக்கும் போதே தன் வசமிருந்த ரிவால்வரை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார் நடராஜன். ரிவால்வரில் இருந்து வந்த முதல் குண்டு வேறு திசை நோக்கி பயணித்துள்ளது. பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டு துப்பாக்கி போல் இருக்கவே, யாரும் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அடுத்து வந்த குண்டு இளங்கோவனின் சம்பந்தியான சுப்ரமணியின் வயிற்றை துளைத்துக் கொண்டு பாய்ந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அடுத்த குண்டு இளங்கோவனின் மாமனாரான பழனிசாமியின் பின் தொடையில் பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் பழனிசாமி. இந்த சம்பவங்கள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அளவிலும் சிறியதாக இருந்ததால் ஏதோ தீபாவளி துப்பாக்கி தான் என நினைத்துக் கொண்டு யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் உடலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தபிறகே நிலைமையின் தீவிரம் புரிந்தது. முதியவர்கள் 2 பேரும் ரோட்டின் நடுவே விழுவதை பார்த்த மக்கள், உடனே கையில் கிடைத்த கற்கள், கட்டைகளை எடுத்து நடராஜன் மீது வீசி எறிந்தனர். அதேநேரம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நடராஜன், தன் தற்காப்புக்காக வாங்கி வைத்திருந்த உரிமம் பெற்ற ரிவால்வர் தான் என்றும், அதை முன்விரோதத்துக்கு பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார் திண்டுக்கல் தேனி சரக டிஐஜி முத்துச்சாமி. தள்ளாத வயதிலும் நில அபகரிப்பு எண்ணத்தில் இருந்த நடராஜன், பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை கை நடுங்க நடுங்க துப்பாக்கியால் சுட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

193 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3473 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4754 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.