"மோசடியான தேர்தலால் ஜோ பைடன் வெற்றி" - ட்விட்டரில் டொனால்டு டிரம்ப் காட்டம்
பதிவு : நவம்பர் 16, 2020, 11:15 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடிகளால் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பேசி வரும் டிரம்ப், தனது ட்விட்டர் கணக்கில், வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை என்றும், தீவிர இடது சிந்தனையுள்ள நிறுவனத்தால் வாக்கு எண்ணிக்கை நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தலில் மோசடிசெய்து சிக்கிக் கொள்ளாமல் பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப், மின்னஞ்சல் வாக்கு முறை என்பது கேலிக்கூத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

பிலிப்பைன்ஸ் புயல் - போப் பிரான்சிஸ் பிரார்த்தனை
பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்துள்ளார். வாட்டிகன் நகரில், புனித பீட்டர் சதுக்கத்தில் தோன்றிய போப் பிரான்சிஸ், பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறினார். மேலும், மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் நிலவும் கலவரச் சூழல் அமைதியடைய வேண்டும் எனவும், ரோமானியாவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்ற தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.  

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசு
"இலங்கை அரசு காத்திருக்க வேண்டும்" - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்
இந்தியா, இலங்கை இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. வவுனியாவில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 1987ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறிவரும் இலங்கை அரசு, தமிழர்களின் நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்ப்பதாக கூறினார். மேலும், நிலங்களை விநியோகம் செய்ய வட மாகாணத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக்கூறியுள்ள அவர், தமிழர்கள் அரசியல் தீர்வு காணும் வரை இலங்கை அரசு காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  



தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

203 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

160 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

120 views

பிற செய்திகள்

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார், ஜசிந்தா - நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்

நியூசிலாந்தில் 53வது நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது.

9 views

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின்உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

16 views

கில்கிட்-பல்திஸ்தான் பேரவை தேர்தலில் முறைகேடு - பாக். மக்கள் கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கில்கிட் பல்திஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 views

தடுப்பு மருந்து செலுத்தும் ஊசிகள் தயாரிக்க கடன் - அதிபர் டிரம்ப் அரசு ரூ.43 ஆயிரம் கோடி வழங்கியது

தடுப்பு மருந்து ஊசிகள் தயாரிக்க, தனியார் மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.

5 views

இலங்கையில் 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் - தமிழகத்தில் இருந்து கடத்தல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

6 views

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய சீனா- பிரத்யேக ரோபோட்டுடன் அனுப்பப்பட்ட விண்கலம்

பிரத்யேக ரோபோட்டுடன் நிலவுக்கு சீனா விண்கலம் அனுப்பி உள்ளது.

168 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.