டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து
பதிவு : நவம்பர் 11, 2020, 07:01 PM
பள்ளி, கல்லூரிகளை டிசம்பருக்கு பிறகு திறக்கலாம் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதை ரத்து செய்யுமாறு தேனி, உத்தமபாளையத்தை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில், சுமார் 11ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளதாக குறிப்பிட்டு, அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு, கொரோனா நோய் தொற்றால் நீதிபதிகளே பாதிக்கப்படும் சூழலில், பள்ளிகளை டிசம்பர் மாதத்துக்கு பிறகு திறக்கலாம் என தெரிவித்தனர். 
அருகில் உள்ள மாநிலங்களின் நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் கூறுவதாக, அரசு தரப்பு  தெரிவித்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணை நவம்பர் 20ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

263 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

0 views

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

6 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

767 views

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரம் : "நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை" - திமுக சார்பில் மனு தாக்கல்

ஒ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

6 views

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு - ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்பு

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட பெண்ணை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.