"VPF கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டும் புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு" - இயக்குனர் பாரதிராஜா தகவல்
பதிவு : நவம்பர் 10, 2020, 04:51 PM
VPF கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார்.
டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருப்பது நல்லது என, தமது அறிக்கையில், அவர் கூறியுள்ளார். தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல என்றும் அவர்  தெரிவித்துள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும், அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில், இதை சிறு வெற்றியாகவும் கருதுவதாக பாரதிராஜா கூறியுள்ளார். VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், VPF கட்டி திரைப்படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

16 views

பிற செய்திகள்

முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் - 'D43' படத்தின் 3 பாடல் தயார் என அறிவிப்பு

தனுஷ் - ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் மீண்டும் பிரிவு என தகவல்கள் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

116 views

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

17 views

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் 'சேஸிங்' படத்தின் 'நிமிர்ந்து நில்' பாடல் வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் திரைப்படத்தின், "நிமிர்ந்து நில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

23 views

மாஸ்டர் - தியேட்டரில் வெளியிடவே விருப்பம்" - பட தயாரிப்பு நிறுவனம் தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

425 views

"பாவ கதைகள்" - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" எனும், ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

162 views

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.