கறிக் கடை முன் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட பிரச்சினை - பாஜக நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர்
பதிவு : நவம்பர் 04, 2020, 08:31 PM
நெல்லையில் கறிக்கடை முன் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட மோதலில் பாஜக நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பெரியதுரை. பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளரான இவர், தன் தந்தையுடன் சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது கடை அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இடையே இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கறிக்கடையில் உள்ள கழிவுகளை தங்கள் பகுதியில் வந்து கொட்டுவதாக கூறி முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி மற்றும் அவரது மகன் சர்ச்சில் ஆகியோர் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த பிரச்சினை பல வருடங்களாக புகைந்து கொண்டே இருந்துள்ளது.இந்த சூழலில் தான் பெரியதுரையின் கறிக்கடை முன் ஜெபமணி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகாத வார்த்தைகளால் பெரியதுரையை ஜெபமணி திட்டியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரிக்கவே, முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பெரியதுரையை நோக்கி சுட்டார். கையில் பலத்த காயம் அடைந்த பெரியதுரை மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்ட மக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜெபமணி மற்றும் அவரது மகன் சர்ச்சிலை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இட பிரச்சினை காரணமாக பாஜக நிர்வாகி மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

270 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

224 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

169 views

பிற செய்திகள்

"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

80 views

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த நிலை உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

426 views

போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

574 views

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

266 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

968 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.