ஒன்றாக பேட்டியளிக்க வந்த ஒரே சமூகத்தவர்கள் - செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு
பதிவு : நவம்பர் 04, 2020, 06:50 PM
மதுரையில், ஒன்றாக பேட்டியளிக்க வந்த ஒரே சமூகத்தவர்கள் இடையே மோதல் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை திருநகர் பகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொது செயலாளரும், திமுக ஆதரவாளருமான கதிரவன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும் அதிமுக ஆதரவாளருமான முருகன் ஜி 
கலந்து கொண்டார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற, முட்டுக்கட்டை போடும் இந்திராகாந்தி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து வரும் 9 ஆம் தேதி பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினர். இதனை தொடர்ந்து பேசிய கதிரவன், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை ஸ்டாலின் சூட்டுவார் என கூறியதால், அருகில் இருந்த முருகன் ஜி ஆவேசமடைத்து கதிரவனின் பேச்சை இடைமறித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
======

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

265 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

222 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

167 views

பிற செய்திகள்

"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

66 views

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த நிலை உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

382 views

போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

511 views

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

16 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

931 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.