மாநிலங்களவையில் முடிவுக்கு வந்த காங்கிரஸ் ஆதிக்கம் - நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க.வுக்கு சாதகம்
பதிவு : நவம்பர் 03, 2020, 06:31 PM
மாநிலங்களவையில் முதல்முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 100-ஐ கடந்துள்ளது.
மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்ளிட்ட 9 பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், திங்களன்று, மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் முதன் முறையாக 100 -ஐ கடந்துள்ளது. 
242 உறுப்பினர்கள் கொண்ட அவையில் நீண்டக்காலமாக காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அதன் பலம் 38 ஆக குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் 11 இடங்களில் 9-ல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 92 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர ஆளும் பா.ஜ.க.வுக்கு, ராம்தாஸ் அத்வாலே கட்சி, அசாம் கனபரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பா.ம.க., போடோலாந்து மக்கள் முன்னணி போன்ற சிறிய கட்சிகளின் 7 உறுப்பினர்கள் ஆதரவு மாநிலங்களவையில் உள்ளது. 
242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், பா.ஜ.க. கூட்டணியின் பலம் 104 ஆக உள்ளது. அக்கட்சிக்கு நியமன உறுப்பினர்களில் 4 பேர் ஆதரவு உள்ளது. இதுதவிர, பிரச்சனைகள் அடிப்படையில் 9 உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க, பிஜூ ஜனதா தளம், 7 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, 6 உறுப்பினர்களை கொண்ட ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்து வருகின்றன. இந்த தேர்தலில், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் சமாஜ்வாதி கட்சி 3 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் இழந்துள்ளன.மாநிலங்களவையில் பா.ஜ.க. கூட்டணி மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் பலம் அதிகரித்து உள்ள நிலையில், மாநிலங்களவையில் சட்டங்களை இயற்றுவது இனி மோடி அரசுக்கு சிக்கல் இருக்காது.புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 25 ஆம் தேதி முதல் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை நீடிக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 31 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பா.ஜ.க. 22 உறுப்பினர்கள் உடன் முதலிடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு 5 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

263 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

10 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

5 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

7 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

11 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.