7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
பதிவு : அக்டோபர் 30, 2020, 03:02 PM
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. அந்த மசோதாவுக்கு 45 நாட்களாகியும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்ததால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆளுநர் ஒப்புதல் தராத சூழலில், அரசாணையால் சட்ட சிக்கல் ஏற்படுமா? என ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர். நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், இன்று திடீரென 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் தனது ஒப்புதல் அளித்திருக்கிறார் 

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலை படிப்புகளின் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இந்த மசோதா குறித்து ஆளுநர் சட்ட ஆலோசனையை நாடியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது''. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டு செப்டம்பர் 26ஆம் தேதி அன்று ஆளுநர் கடிதம் அனுப்பியதாகவும்,

அந்த கடிதத்திற்கு அக்டோபர் 29ஆம் தேதி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து பதில் வந்ததாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து கருத்து பெறப்பட்ட உடனேயே, 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

3078 views

சிம்பு பாம்பு பிடித்ததால் வந்த பிரச்சினை - இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம்

சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சி சர்ச்சையாகி இருப்பது தொடர்பாக, "ஈஸ்வரன்" படத்தின் இயக்குனர் சுசீந்தீரன் விளக்கமளித்துள்ளனர்.

1408 views

பிற செய்திகள்

"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

75 views

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த நிலை உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

408 views

போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

546 views

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

165 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

957 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.