500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி - தோட்டக்கலை பணியாளர்கள் தீவிரம்
பதிவு : அக்டோபர் 18, 2020, 12:31 PM
குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில், 500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி, பேரி, பிளம்ஸ் ஆகியவை மட்டுமின்றி, திராட்சை, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் போன்றவற்றை கொண்டு பழரசம் தயாராகிறது. கொரோனா பாதிப்பால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 500 கிலோ ஜாதிக்காயில் ஊறுகாய் செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலை பணியாளர்கள், முக கவசம் அணிந்து ஊறுகாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுப்பதிலும் ஜாதிக்காய் பயன்படுகிறது. மேலும், வயிற்று வலி, வாயுத் தொல்லை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன் படுகிறது.

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

88 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

144 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

40 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.