"வேலைவாய்ப்பு - போர்க்கால நடவடிக்கை எடுங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : அக்டோபர் 18, 2020, 12:16 PM
தமிழகத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களும், ஏழை எளிய, நடுத்தர மக்களும் வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி, தினமும் இன்னல்களினால் திணறிக் கொண்டிருப்பதை முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு என கூறியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும், 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தியும், அதனை ஏற்க மறுத்து, டெண்டர்களிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரங்கராஜன் தலைமையிலான குழு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அளித்த பரிந்துரைகளை, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடவில்லை என்றும், 

250 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

கொரோனா ஊரடங்கில் இருந்து தமிழகம் முற்றிலும் வெளியே வருவதற்கான சூழல்களை அதிமுக அரசு உருவாக்கவில்லை என தெரிவித்துள்ள ஸ்டாலின்,

அரசின் தோல்வியைத் திசைதிருப்ப, முதலீடுகள் வருகிறது - தொழில்கள் துவங்கப் போகிறது - வேலைவாய்ப்பு வரப் போகிறது என்று கடந்த 10 ஆண்டுகளாக சொன்ன 'அம்புலி மாமா'  கதையையே திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு கூறி ஏமாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இனியும் இதுபோன்ற "திசைதிருப்பும்" வேலைகளில் ஈடுபட்டு - வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல், கிராமப் புறத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெருக்க உருப்படியான நடவடிக்கையை அரசு எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அதே போல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, பிரத்யேகமாக ஒரு "நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை" அறிவிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

50 views

ஜெ.மரணம்;யாரும் தப்ப முடியாது - ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

45 views

பிற செய்திகள்

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

143 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

40 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

89 views

தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..

289 views

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16 views

"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.