சென்னை VS டெல்லி - சுவாரஸ்ய தருணங்கள்
பதிவு : அக்டோபர் 18, 2020, 12:10 PM
நேற்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அணி போராடி தோல்வியை தழுவியுள்ளது.
முதல் இடம் சந்தேகமே இல்லாமல் டெல்லி வீர‌ர் ஷிகர் தவானுக்கு... தொடக்க ஆட்டக்கார‌ராக களமிறங்கிய தவான், 58 பந்துகளை சந்தித்து, சதம் விளாசினார். இதில், 1 சிக்ஸ் மற்றும் 14 பவுண்டரிகளும் அடக்கம். 

2வது இடம் டெல்லி அணி வீர‌ர் அக்சர் படேலுக்கு... 
இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அக்சர் படேல், 5 பந்தில் 25 ரன்கள் விளாசி போட்டியை முடித்தார். இதில் 3 சிக்சர்களும் அடக்கம்...

இதே போல சென்னை அணியிலும், ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்திருந்தார். 


அதே சமயம் அடித்த சிக்சர்கள் அத்தனையும் பந்துவீச்சில் கொடுத்து விட்டார் ஜடேஜா...  11 பந்துகள் மட்டுமே வீசிய ஜடேஜா, 35 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

அடுத்த‌தாக சென்னை வீர‌ர் டூ பிளசி அடித்த அரைசதம்... 47 பந்துகளை சந்தித்த டூ பிளசி 2 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார். 

இதேபோல சென்னை அணி வீர‌ர் அம்பத்தி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 25 பந்துகளை சந்தித்த ராயுடு, 4 சிக்ஸ் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்தார். 

7 வது இடத்தில் சென்னையின் சுட்டிக் குழந்தை சாம் கரணின் டக் அவுட்.... 
கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சாம் கரன் இந்த போட்டியிலும் தொடக்க ஆட்டக்கார‌ராக களமிறங்கப்பட்டார். ஆனால் அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

8 வது இடத்தில் டெல்லி ஆணியின் சுட்டிக்குழந்தை ப்ரித்வி ஷாவின் டக் அவுட்... கடந்த போட்டியில் கோல்டன் டக் ஆன பிரித்வி ஷா, இந்த போட்டியில் 2 பந்துகளை சந்தித்து பந்து வீசிய தீபக் சஹார் கையிலே கேட்ச் கொடுத்து வெளியேற்றப்பட்டார். 

9 வது இடத்தில் சென்னை வீர‌ர் டூ பிளசி மற்றும் டெல்லி வீர‌ர் ராபாடா இருவரும் மோதிக்கொண்டது...  ரன் ஓடும் வேகத்தில் ரபாடா மீது பயங்கரமாக மோதிய டு பிளசி சிறுது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் ஆடினார். 

10வது இடத்தில் ஜடேஜாவின் ஓவர் கான்பிட‌ன்ட்....   ஷிகர் தவான் ஓடிய போது புயல் வேகத்தில் பந்தை பிடித்து ஸ்டெம்பை பதம் பார்த்த ஜடேஜா , ரன் அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில், பரிதாபம் கலந்த கண்களோட தவானை ஆரத்தழுவினார்... ஆனால் அது நாட் அவுட் என அறிவித்த‌து ஜடேஜாவிற்கு பல்பாக அமைந்த‌து...  

தொடர்புடைய செய்திகள்

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு - வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து விமர்சனம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

97 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

59 views

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

26 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

9 views

பிற செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

2556 views

"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - டிமிடிரோவ் கால் இறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், பிரபல கிரேக்க வீரர் ஸ்டேபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

14 views

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

54 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1707 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.