லடாக் எல்லையில் பாதுகாப்பு பணி - நடனமாடி இந்திய வீரர்கள் உற்சாகம்
பதிவு : அக்டோபர் 17, 2020, 02:05 PM
லடாக் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் நடனமாடி தங்களை உற்சாகப் படுத்திக் கொண்டனர்.
லடாக் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள்  நடனமாடி தங்களை உற்சாகப் படுத்திக் கொண்டனர். பாங்காங் சோ பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சீன வீரர்கள், பலருக்கு பணி மற்றும் புதிய சூழல் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் வழங்கப்படுவது போன்ற வீடியோக்கள் சீன ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், அங்குள்ள இந்திய வீரர்கள், உள்ளூர் மொழி பாடல்களுக்கு எந்தவித சிரமமுமின்றி வெகு இயல்பாக நடனமாடி தங்களை உற்சாகப்படுத்தி கொண்டனர். 

"நவம்பரில் இந்தியா வரும் 3 ரபேல் போர் விமானங்கள்" - மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தகவல்

பிரான்சில் இருந்து, நவம்பர் மாதத்தில் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அரசிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 3 அல்லது 4 ரபேல் விமானங்கள் நவம்பர் மாதத்தில் இந்தியா கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், பிரான்ஸ் சென்றுள்ள இந்திய விமானப்படையின் துணை மார்ஷல் என்.திவாரி தலைமையிலான குழு இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினரிடம் சரணடைந்த தீவிரவாதி - ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல்


ஜம்மு காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்னர் தீவிரவாதக் குழுவில் இணைந்த இளைஞரை, பாதுகாப்புப் படையினர் உயிருடன் சரணடைய வைத்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவில், கைகளை உயர்த்தியபடி வரும் ஜகாங்கீர் என்கிற இளைஞரை ஆறுதல்படுத்தி ராணுவவீரர் ஒருவர் சரணடையச் செய்கிறார். அந்த இளைஞரிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  


தொடர்புடைய செய்திகள்

மகளிர் கிரிக்கெட் போட்டி - இந்திய ராணுவம் ஏற்பாடு

ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாட்டின் படி மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

14 views

பிற செய்திகள்

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

85 views

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

118 views

2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

14 views

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 views

"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.