சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு; "மலையேறும் போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்" - பினராயி விஜயன் கோரிக்கை
பதிவு : அக்டோபர் 16, 2020, 02:20 PM
சபரிமலையில் மலையேறும் போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால், பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று நடை திறக்கப்பட உள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராய் விஜயன், மலையேறும்போது முகக்கவசம் அணிந்து இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பக்தர்கள் அப்போது மட்டும் அணிய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்திய அவர், சபரிமலை செல்லும் பக்தர்கள் கும்பலாக மலை ஏற வேண்டாம் என்றும் கிருமிநாசினியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த பக்தர்கள், அதற்கான சான்றுகளுடன் வந்தால் உதவிகரமாக இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டார். 

பிற செய்திகள்

இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

18 views

மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு

அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

11 views

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

8 views

தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

26 views

ஜூன்-2021-ல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் நிறுவனம் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

19 views

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.