நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்
பதிவு : அக்டோபர் 15, 2020, 12:39 PM
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை தவிர்த்தால் எப்போதும் ஈழ மக்களின் மனதிலும், தன் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா என்றும் சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம் இனம் கடந்து வந்துள்ளது என்றாலும் எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான் என பாரதிராஜா காட்டமாகவே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக கோரிக்கை ஒன்றை வைப்பதாகவும், இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலம் காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என வலியுத்தி இருக்கும் பாரதிராஜா, அப்படி தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், தன் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா? என குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, உண்மையிலேயே நீங்கள்  தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் திலீபனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முன்வாருங்கள் என்றும், அவ்வாறு செய்தால் ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கிறோம் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

392 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

172 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

54 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

13 views

பிற செய்திகள்

வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

வருகிற 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை. பண்டிகை காலத்தையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை.

4 views

மோர்தானா அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்

தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதி அருகே இருக்கும் கௌவுண்டன்யாமகாநதி ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது

6 views

மருதுபாண்டியர்களின் 219 வது நினைவுதினம் - திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை

219 வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தப்பட்டது.

5 views

"மருதுபாண்டியரின் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

10 views

திருமாவளவன் மீது வழக்கு - ஸ்டாலின் கண்டனம்

திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

16 views

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.