பர்னிச்சர் கடையில் செல்போன், டூவீலர் திருட்டு - டாக்டர் என கூறி நூதனமாக கைவரிசை காட்டிய நபர்
பதிவு : அக்டோபர் 13, 2020, 01:33 PM
கமுதியில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடை ஊழியரை தன்னுடனே அழைத்துச் சென்று கடைசியில் கைவரிசை காட்டிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்  மாவட்டம் கமுதியில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வாடிக்கையாளர் போல ஒருவர் வந்துள்ளார். தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டு கடையில் பொருட்களை வாங்குவது போல நடித்த அந்த நபர், ஏடிஎம் செல்ல வேண்டும் என கூறி கடைக்காரரின் இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார்.  அவரும் வாகனத்தை தந்ததோடு கடையின் ஊழியர் ஒருவரையும் உடன் அனுப்பி வைத்துள்ளார். அப்படி சென்ற அந்த மர்மநபர், இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் நூதனமாக திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் அந்த கில்லாடி நபரின் முகம் பதிவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சாலை விதிகளை மீறிய லாரியால் விபத்து - காயமடைந்தவர் செல்போனை திருட முயற்சி

நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், சாலை விதியை மீறி வலது பக்கம் சென்ற லாரியால் விபத்து நேரிட்டது.

19 views

9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

17 views

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

517 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

33 views

"14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - "நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு"

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

297 views

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.

72 views

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

8 views

ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.