"முதலமைச்சரின் ஆய்வு கூட்டத்தை புறக்கணிப்பேன்"- திமுக எம்.எல்.ஏ., சுரேஷ் ராஜன் தகவல்
பதிவு : அக்டோபர் 11, 2020, 04:26 PM
முதலமைச்சர் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் குறித்து மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இதுவரை தகவல் தரவில்லை என்றார். 
நாகர்கோயில் தொகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் எவ்விதமான வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஆட்சி முடிவதற்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில், இப்போது ஆட்சியாளர்களால் வளர்ச்சிப் பணி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தெரிவித்தார். 

பிற செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

14 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

764 views

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

50 views

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

118 views

"மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

44 views

நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு - 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க முடிவு

கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் குறித்து முடிவெடுக்க பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.