37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு - கேப்டன் கோலி 90 ரன்கள்
பதிவு : அக்டோபர் 11, 2020, 09:51 AM
மாற்றம் : அக்டோபர் 11, 2020, 02:16 PM
ஐபிஎல் 25 வது லீக் ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொண்ட சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இறுதிவரை களத்தில் இருந்த அவர்,  90 ரன்களும் குவித்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 169 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் அம்பத்தி ராயுடு 42 ரன்களும், தமிழக வீர‌ர் ஜெகதீசன், 33 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த வீர‌ர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. பெங்களூரு பந்துவீச்சாளர்கள் கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீர‌ர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா - 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி 

முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் 24வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி சார்பில், இளம் தொடக்க ஆட்டக்கார‌ர் கில் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்தனர். தினேஷ் கார்த்திக், கில், ராணா என 3 முக்கிய வீர‌ர்கள் ரன் அவுட் ஆகினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்த‌து. இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்கார‌ர்கள் மயங்க் அகர்வால் 56 ரன்கள், மற்றும் கே.எல்.ராகுல் 74 ரன்கள் என வழக்கம் போல சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.  ஆனால் அதன்பின் வந்த விக்கெட்டுகளை கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்தனர். சிறப்பாக பந்துவீசிய பிரசீத் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 6 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 5 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் சுனில் நரேன். இறுதி பந்தில் வானத்தை நோக்கி பறந்த மேக்ஸ்வெல் அடித்த பந்து பவுண்டரி லைனிற்கு மிக அருகே விழுந்து ஃபோர் ஆக மாறியது. இதனால் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 


பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - ஆடவர் இரட்டையரில் ஜெர்மன் ஜோடி சாம்பியன்

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த ஆடவர் பிரிவு இரட்டையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மன் ஜோடி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

பிரேசிலின் புருனோ (BRUNO) மற்றும் குரேஷியாவின் மேட் பாவிக் (MATE PAVOIC)  இணையை ஜெர்மனியின் கெவின் கெரேவிட்ஸ் (KEVIN KAREWITZ) மற்றும் ஆண்டிரிஸ் மீஸ் (ANDREAS MIES) ஜோடி எதிர்கொண்டது. 

வெறும் 89 நிமிடங்களே நீடித்த இறுதி ஆட்டத்தில் ஜெர்மனின் கெவின், மீஸ் இணை 6-க்கு 3, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது.    

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் பிரிவில் இகா சாம்பியன்

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (IGA SWIATEK) வெற்றி பெற்று முதல் முறையாக மகுடம் சூடினார். அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் உடனான (SOFIA KENIN) இறுதி ஆட்டத்தில் 6-க்கு 4, 6-க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பைக்கு முத்தமிட்டார். இந்த வெற்றியின் மூலம் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி சென்ற முதல் போலாந்து இளம் வீராங்கனை என்ற சிறப்புக்கு இகா சொந்தக்காரர் ஆனார். 


பிரஞ்சு கிராண்ட்பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - தொடக்க சுற்றில் பிரஞ்சு வீரர் பெபியோ வெற்றி

பிரான்சில் நடந்த பிரஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய தொடரின் தொடக்க சுற்று ஆட்டத்தில் பெபியோ குவர்டராரோ (Fabio Quartararo) வெற்றி பெற்றார். அதிவேக மோட்டர் சைக்கிள் பந்தைய தொடரில் நடந்த தொடக்க சுற்று ஆட்டத்தில் உள்ளூர் நாயகனும் முன்னாள் சாம்பியனுமான பெபியோ சீறிப் பாய்ந்து பந்தய தூரத்தை 1 மணி 31 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார்.  
தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

9 views

பிற செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

2526 views

"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - டிமிடிரோவ் கால் இறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், பிரபல கிரேக்க வீரர் ஸ்டேபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

14 views

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

53 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1705 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.