விக்கிரகங்களை கொண்டு செல்லும் பாரம்பரிய முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்கள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 10, 2020, 10:00 AM
நவராத்திரி விழாவுக்காக கொண்டு செல்லப்படும் விக்கிரகங்களின் பாரம்பரிய நடைமுறையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்கள் கல்குளத்தில் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி  பூஜையில் வைப்பதற்காக, பத்மநாபபுரம் தேவார கட்டு  சரஸ்வதி, குமாரகோவில் முருகன் ,சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய மூன்று விக்ரகங்களும் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக நடந்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.  தமிழக கேரள மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இரு மாநில மக்களும் ஒன்றிணைந்து இந்த விழா காலம் காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால், விக்ரகங்களை பவனியாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் பத்மநாபபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றிச் செல்ல கேரள அரசு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 
பாரம்பரிய முறையில்  பத்மநாபபுரம் முதல் திருவனந்தபுரம் வரை விக்ரகங்களை பவனியாக நடந்து கொண்டு செல்ல அனுமதிக்க கோரி, இந்து இயக்கங்கள் சார்பில் கல்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தால், பத்மநாபபுரம் - தக்கலை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

19 views

இஸ்ரேல் பிரதமரை எதிர்த்து போராட்டம் - பிரதமர் வீடு முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

10 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

107 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.