பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞருடன் காதல் - காதலனை சந்திக்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்
பதிவு : அக்டோபர் 10, 2020, 09:37 AM
பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞருடன் காதல்... யார் என தெரியாத இளைஞருடன் பயணம் என்றிருந்த 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கும் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார் ஒரு இளைஞர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பேரிகை என்ற கிராமத்தை சேர்ந்த தரணி என்ற இளைஞருடன் சிறுமிக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் பல மணி நேரமாக போனில் பேசி வந்த நிலையில் நேரில் சந்திக்க திட்டம் தீட்டியிருக்கின்றனர். 

இந்த சூழலில் தான் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கே இருந்த விபின்ராஜ் என்ற இளைஞரை பார்த்த சிறுமி, அவரிடம் தன் காதலனை பற்றி கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஒசூருக்கு செல்ல இருப்பதாக சிறுமி கூறவே, தான் உதவி செய்கிறேன் என முன்வந்துள்ளார் விபின்ராஜ்.

ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை நம்பி கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார் அந்த சிறுமி. தான் வருவதை தன் காதலனுக்கும் தெரிவித்துள்ளார். விபின்ராஜ் தன் நண்பர்களான அஜித்ராஜ், ஜோபியன் ஆகிய 2 பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். 

செல்லும் வழியில் காரை நிறுத்திய அந்த கும்பல், சிறுமியை காருக்குள்ளேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. செய்வதறியாக திகைத்த சிறுமியை, ஒசூர் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு கிளம்பியிருக்கிறது அந்த கும்பல்... பின்னர் தன் காதலனுக்கு போன் செய்துள்ளார் அந்த சிறுமி. 

பின்னர் காதலன் தரணி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே தன் மகளை காணாமல் பரிதவித்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது சிறுமியின் செல்போன் ஒசூர் அருகே இருப்பதை கண்டறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர். 

மேலும் காதலன் தரணியையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு நடந்த அத்தனை கொடூரங்களும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த விபின்ராஜ், அஜித்ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அறியாத வயதில் வந்த காதலும், செல்போனும், அறியாமையும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை சீரழித்திருப்பது சோகத்தின் உச்சம்... 

தொடர்புடைய செய்திகள்

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு - வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து விமர்சனம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

97 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

59 views

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

26 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

10 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

108 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.