மாநகராட்சி நிர்வாகம் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் - கோரிக்கை பதாகைகளை ஆடையாக அணிந்து போராட்டம்
பதிவு : அக்டோபர் 10, 2020, 08:52 AM
மாநகராட்சி நிர்வாகம் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, கோரிக்கை பதாகைகளை ஆடையாக அணிந்து நெல்லையில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். ஏசி மெக்கானிக்கான இவருக்கு சேவியர் காலனி பகுதியில், சொந்த நிலம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி நிர்வாகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கட்டிய நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதாக கணேசன் குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ள அவர், மாநகராட்சியைக் கண்டித்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பதாகைகளை ஆடையாக அணிந்து கணேசன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், அவரது குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருக்கும் இடத்துக்கு அரை நிர்வாண கோலத்தோடு அவர் செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

38 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

18 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.