பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
பதிவு : அக்டோபர் 09, 2020, 05:43 PM
தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க செம்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில்,  2 ஆண்டு முதுகலை பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியானது.  

இதற்கான கல்வி தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து,  கல்வி தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், தொல்லியல் துறை சார்பில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து நேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

செம்மொழியான தமிழ் மொழியை   தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என்று கேட்ட  நீதிபதிகள், அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த பின்புதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் குரல் எழுப்பிய பின்புதான் 
இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அதிகாரி மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

598 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

204 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

152 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

98 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

19 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

15 views

பிற செய்திகள்

ஆளுநர் பன்வாரிலால் உடன் முதலமைச்சர் சந்திப்பு - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

41 views

ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

195 views

தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

404 views

நெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முடிவு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை

பக்தர்களின் போராட்டத்தை அடுத்து நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

9 views

மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகள் திறப்பு - காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரியில் மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்ற அறிவிப்பை மீறி காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

8 views

"வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி" - திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.