ஹத்ராஸ் சம்பவம் - இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை
பதிவு : அக்டோபர் 09, 2020, 04:39 PM
ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மருத்துவக்குழுவினர், கொரோனா சோதனை செய்தனர்.
ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மருத்துவக்குழுவினர், கொரோனா சோதனை செய்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொற்று பரவி இருக்கிறா என்பதை ஆய்வு செய்ய, மருத்துக்குழு அங்கு முகாமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்கள் கொரோனா சோதனை செய்தனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு குறித்து டிஐஜி அங்கு ஆய்வு செய்தார். அப்போது அவர்களது வீட்டின் அருகே சிசிடிவி கேமிரா பொருத்தப் பட்டு உள்ளதாகவும், மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளித்து வருவதாகவும், உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. 
----

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.