மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்
பதிவு : அக்டோபர் 09, 2020, 02:21 PM
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் ராம் விலாஸை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

459 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

33 views

"14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - "நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு"

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

285 views

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.

70 views

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

8 views

ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.