நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி - தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
பதிவு : அக்டோபர் 09, 2020, 11:40 AM
நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சூரி அடையாறு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில்ஸ வீர தீர சூரன் என்ற படத்திற்கான 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், நிலம் வாங்கி தருவதாகக் கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.  இது தொடர்பாக விசாரித்த அடையாறு போலீசார், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரமேஷ் குடவாலா ஆகிய இருவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

போலி ஆவணங்களை உருவாக்கி நடிகர் சூரியிடம் மோசடி - நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி குற்றச்சாட்டு

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட முன்னான் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2602 views

பிற செய்திகள்

பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.

21 views

"26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்

சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

469 views

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம் : சீறும் புலி பாயும்" - விரைவில் வெளியிடப்படும் என தகவல்

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று சீறும் புலி எனும் தலைப்பில் படமாக உருவாக்கப்படுகிறது.

263 views

பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் - தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரசிகர்களிடம் பேசியதாக தகவல்

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

137 views

நலமுடன் இருக்கிறார் நடிகர் கவுண்டமணி - சமூக வலை தளங்களில் தவறான தகவல்

நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி முழுஉடல்நலத்துடன் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

65 views

"கட்சிக்குள் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை" - செந்தில்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு பார்த்திபன் பதிலடி

தர்ம‌புரி திமுக எம்.பி. செந்தில்குமார் விமர்சனத்திற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.