கொரோனாவுக்கு உயிரிழந்த 2 காவலர்கள் - காவலர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டிய சக காவலர்கள்
பதிவு : அக்டோபர் 09, 2020, 10:47 AM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ஜூலியன் குமார் ஆகியோர் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ஜூலியன் குமார் ஆகியோர் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தனர். இவர்களது குடும்பங்களுக்கு   கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் தாமாக முன்வந்து தங்களது ஒரு நாள் சம்பளத்தை  நிதிக்காக வழங்கினார்கள். அந்த வகையில் திரட்டப்பட்ட  34 லட்சத்து 59 ஆயிரத்து 547 ரூபாய் நிதி,  இறந்த இரண்டு காவலர்களின் குடும்பத்தினருக்கும் தலா 17 லட்சத்து 29 ஆயிரத்து 763 ரூபாயாக பிரித்து கொடுக்கப்பட்டது. இதற்கான காசோலையை  கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் , அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தாரிடம் வழங்கினார்.

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

107 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.