ராக்கெட் ஏவுதளம் பற்றிய முறையான விழிப்புணர்வு அவசியம் - ராக்கெட் ஏவுதளத்தை விரைந்து அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை
பதிவு : அக்டோபர் 09, 2020, 09:22 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா விற்கு அடுத்தபடியாக இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா விற்கு அடுத்தபடியாக இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது. இதற்காக இரண்டாயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால்  திருச்செந்தூர் குலசை பகுதி சார்ந்த மக்களுக்கு இன்னும் ராக்கெட் ஏவுதளம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், ராக்கெட் ஏவுதளத்தை விரைந்து அமைத்திட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

343 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

31 views

"14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - "நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு"

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

262 views

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.

68 views

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

7 views

ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.