கருணை அடிப்படையில் வேலை வழங்கக்கோரிய வழக்கு - உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பதிவு : அக்டோபர் 09, 2020, 09:09 AM
சமூக விரோதிகளால் வெடி குண்டு வீசி கொல்லப்பட்ட சார்பு ஆய்வாளர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து உள்துறை செயலர் 4 வாரத்தில் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த தனது தந்தை வெற்றிவேல், கடந்த 2010 ஆம் ஆண்டு சமூக விரோதிகளால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தென்காசி முள்ளிக்குளத்தைச் சேர்ந்த அவரது மகன் அசோக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் தந்தை இறந்ததும், கருணை அடிப்படையில் அவரது தாயார் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டதாகவும், அப்போது 18 வயதானதும்,  கருணை வேலையை மகனுக்கு வழங்குமாறும் தனது தாயார் கடிதம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் தற்போது 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில், தாயாருக்கு வழங்கிய கருணை வேலையை தமக்கு வழங்க கோரி மனு அளித்தும், இதுவரை தமக்கு வேலை வழங்கப்படவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  கருணை வேலை கேட்டு மனுதாரர் அனுப்பியுள்ள மனுவை உள்துறை செயலர் 4 வாரத்தில் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

38 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

19 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.