"கடன் வசூல் ஏஜென்சிகளின் கெடுபிடிகளை தடுக்க முடியாதா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
பதிவு : அக்டோபர் 09, 2020, 08:54 AM
வங்கிக்கடன் வசூலிக்கும் போது ஏஜென்சிகளின் சட்டவிரோத நடைமுறைகளை தடுக்க முடியாதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், மாங்காட்டை சேர்ந்த பூபதி ராஜா என்பவர்  செய்த மனுவில்,  கொரோனா பாதிப்பு காரணமாக வங்கிக்கடன் கட்டமுடியாத நிலையில் உள்ள தன்னை, வங்கி கடன் வசூல் பிரிவினர் தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன், குடும்பத்தினரையும் மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்,.  இந்த மனுவை நீதிபதிகள் கடன் வசூல் செய்யும் தனியார் ஏஜென்சிகள் சட்டவிரோதமாக நடப்பதை தடுக்க முடியாதா?  என கேள்வி எழுப்பினர்,.  மேலும், ஏழைகளிடம் தான் அதிகளவு கெடுபிடி காட்டும் வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடியில் கடன் வாங்கி செலுத்தாவர்களிடம் கெடுபிடியை காட்டுவதில்லை எனவும்  தெரிவித்தனர்,.   கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற விவகாரங்களில் ரிசர்வ் வங்கி தரப்பில் எத்தனை குற்றவியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய நிதித்துறை செயலர், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

8 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

107 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

200 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

49 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

191 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.