ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு - பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
பதிவு : அக்டோபர் 09, 2020, 08:40 AM
ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  எனது சோகத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றும் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்,.  பாஸ்வானின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பேரிழப்பு என்றும்  எனது நண்பரை இழந்துள்ளேன் எனவும் மோடி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்,.  ஒவ்வொரு ஏழையின் வாழ்விலும் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும் என பணியாற்றியவர் ராம் விலாஸ் பாஸ்வான் என்றும் பிரதமர் மோடி புகாழாரம் சூட்டியுள்ளார். 

"பஸ்வானின் கனவை மத்திய அரசு நிறைவேற்றும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய அரசியல் மற்றும் மத்திய அமைச்சரவை ராம்விலாஸ் பஸ்வானை எப்போது நினைவுகூறும் என குறிப்பிட்டுள்ளார்,. ஏழைகளின் நலன் மற்றும் பீகாரின் வளர்ச்சி குறித்த பஸ்வானின் கனவை நிறைவேற்ற  மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்,. 

"ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் அரசியல் குரலை இழந்துள்ளனர்" - ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் எம்பி  ராகுல் காந்தி வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் வலுவான அரசியல் குரலை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்,. 

"ஒடுக்கப்பட்ட மக்களின்  குரல் ஓய்ந்து விட்டது" - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சமூக நீதியின் உறுதிமிக்க தூண் சாய்ந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்,.  அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் சார்பாக நாடாளுமன்றத்தில் ஓலித்துக்கொண்டு இருந்த  உரிமைக் குரல் ஓய்ந்து விட்டது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் வீடு திரும்பி - சமூகநீதிக்காகவும் - அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக் குரலாகவும் விளங்கி, தொடர்ந்து முன்னெப்போதும் போல் பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் - அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தைத் தாக்கியிருக்கிறது. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவருடைய அன்பு மகன் சிராக் பாஸ்வானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தனது அமைச்சரவை சகாக்களில் அனுபவமிக்க ஒருவரை- மதச்சார்பற்ற மாமனிதர் ஒருவரை - இழந்திருக்கும் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைசிறந்த நாடாளுமன்றவாதியான அவர், 1977 பொதுத்தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் தன் வாதங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்று புகழாரம் சூட்டினார். 


பிற செய்திகள்

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

99 views

தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..

301 views

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16 views

"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.