மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்து வந்த அரசியல் பாதை...
பதிவு : அக்டோபர் 09, 2020, 08:31 AM
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தொடர்ச்சியாக 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தொடர்ச்சியாக 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.  ராம்விலாஸ் பஸ்வான் பீகார்  மாநிலம் ககாரியா  பகுதியில் 1946 ஆம் ஆண்டு பிறந்தார். சம்யுக்தா சோசியலிஸ்ட் என்ற கட்சியில் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் 1969 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ம் ஆண்டு லோக்தள கட்சி தொடங்கப்பட்ட பிறகு அதில் சேர்ந்த அவர் அக்கட்சியின்  பொதுச் செயலாளராக பதவி வகித்தார். பின்னர் ஜனதா கட்சியில் இணைந்த பஸ்வான் 1977 இல்  ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தொடர்ச்சியாக அதேதொகுதியில்  8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000 மாவது ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியை நிறுவியவர் அதன் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை, சுரங்கத்துறை, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ரயில்வேதுறை, தொழிலாளர் நலத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய அவர்,  அதன் பிறகு மத்திய அமைச்சரவை பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

பிற செய்திகள்

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

139 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

40 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

88 views

தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..

288 views

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16 views

"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.